இந்தியாவைப் பாதுகாக்க களமிறங்கும் ஐ.என்.எஸ். இம்பால் : பரிசோதனை வெற்றிகரம்
இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். இம்பால் போர் கப்பலில் இருந்து பிரமோஸ் ஏவுகணை செலுத்தும் பரிசோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக இந்திய கடற்படையின் மேற்கு பகுதி ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மணிக்கு சுமார் 56 கிலோமீட்டர் தூரம் பயணிக்கக் கூடிய இந்தக் கப்பல், 164 மீட்டர் நீளம் கொண்டதுடன் கப்பலில்(சுமார் 7400 தொன்) இருந்து தரையிலிருந்து தரைக்கு செல்லும் ஏவுகணைகளை செலுத்த முடியும்.
ஏவுகணை பரிசோதனை
இந்தக் கப்பலை இந்த வருட இறுதியில் அல்லது 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நாட்டின் பாதுகாப்பிற்கு அர்ப்பணிக்க இந்திய கப்பற்படை திட்டமிடப்பட்டு செயற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கப்பலில் இருந்து பிரமோஸ் ஏவுகணை செலுத்தும் பரிசோதனை இன்று(22) வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
ஐ.என்.எஸ். இம்பால்
இந்திய கடற்படைக்கு சொந்தமானது ஐ.என்.எஸ். இம்பால் (INS Imphal) போர் கப்பல் உலகின் நவீன போர் கப்பல்களில் ஒன்றாக இருக்கிறது.
இது கைடட் மிஸைல் டெஸ்ட்ராயர் கைடட் மிஸைல் டெஸ்ட்ராயர் (guided missile destroyer) எனும் வகையை சேர்ந்தது.