உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : முன்னாள் புலனாய்வு பணிப்பாளருக்கு மரண தண்டனை கோரிக்கை
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தின் போது கடமை தவறிய அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை கொழும்பு பேராயர் அலுவலக ஊடகப் பிரதானி ஜூட் கிரிசாந்த அருட்தந்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தின் போது கடமை தவறிய குற்றச்சாட்டின் பேரில் நிலந்த சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
குண்டுத் தாக்குதல்
நிலந்தவிற்கு ஆயுள் தண்டனையை விடவும் மரண தண்டனையே பொருத்தமானது என்பது தமது நிலைப்பாடு என அருட்தந்தை ஜூட் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் மூன்று ஜனாதிபதிகள் நிலந்தவை ஏன் பணி நீக்கம் செய்யவில்லை என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குண்டுத் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்ற தகவல் அறிந்திருந்த அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) பதில் பாதுகாப்பு அமைச்சர் ஒருவரைக் கூட நியமிக்காது வெளிநாடு சென்றது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
