4 வயது சிறுமி மீது கொடூர தாக்குதல்: தேசபந்து தென்னகோன் விடுத்துள்ள வேண்டுகோள்
4 வயது சிறுமி தாக்கப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து பொதுமக்களின் ஆதரவுடன் காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்துள்ளதாக காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) தெரிவித்துள்ளார்.
கம்பகா (Gampaha) - களனியில் நேற்று (06) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மக்கள் கோரிக்கை
குறித்த நபரை விரைவில் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என அனைத்து தரப்பினரும் பல்வேறு சமூக அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவல்துறை மீது பொதுமக்களுக்கு விமர்சனங்கள் இருக்கலாம் என்றும், பெரும்பாலான காவல்துறை அதிகாரிகள் நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் தங்கள் கடமைகளைச் செய்வதால், அந்தத் தவறுகளை சரி செய்ய காவல்துறை தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கையில் குற்றச்செயல்கள், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு பொலிஸாருக்கு தொடர்ந்து பொது மக்களின் ஆதரவு தேவைப்படுவதாகவும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |