யாழ். விஜயத்தில் புலனாய்வு அதிகாரிகளை அதிர வைத்த ஜனாதிபதி அநுர

CID - Sri Lanka Police Jaffna Anura Kumara Dissanayaka President of Sri lanka
By Thulsi Sep 03, 2025 01:24 AM GMT
Report

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு நேற்று வந்திருந்த நிலையில், அவர் எப்போது யாழ்ப்பாணம் வருகின்றார்? யாழ்ப்பாணத்தில் எங்கு தங்கியிருக்கின்றார்? என்ற விடயம் புலனாய்வு அதிகாரிகள் உட்பட அரச பெருந்தலைகள் எவருக்கும் தெரியாமல் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார யாழ்ப்பாணத்துக்கு கடந்த 01.09.2025 ஆம் திகதி பயணம் மேற்கொண்டார்.

இந்தப் பயணத்தின் போது, முதலாவது நிகழ்வாக காலை 10 மணிக்கு மயிலிட்டி துறைமுக அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்பதாக இருந்தது.

தையிட்டி விகாரதிபதியிடம் ஆசிர்வாதம் வாங்கிய அநுர - யாழில் வெடித்த சர்ச்சை

தையிட்டி விகாரதிபதியிடம் ஆசிர்வாதம் வாங்கிய அநுர - யாழில் வெடித்த சர்ச்சை

உச்சக்கட்டக் கண்காணிப்பு

ஜனாதிபதியின் பயணத்தை முன்னிட்டுப் புலனாய்வாளர்கள் உச்சக்கட்டக் கண்காணிப்பைச் செலுத்தியிருந்தனர்.

யாழ். விஜயத்தில் புலனாய்வு அதிகாரிகளை அதிர வைத்த ஜனாதிபதி அநுர | Intelligence Officials Shocked Anura Jaffna Visit

இதனால், 31ஆம் திகதி நள்ளிரவே ஜனாதிபதி இராணுவக் காவலரண்களை தாண்டிவிட்டார் என்ற தகவல் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்துள்ளது.

எனினும், யாழ்ப்பாணத்துக்குள் ஜனாதிபதி நுழைந்து விட்டாரா? அவர் எங்கு சென்றார்? என்று அவர்களால் தொடர்ச்சியாக அறியமுடியவில்லை.

இந்த விடயங்கள் தொடர்பில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரியாத நிலையில் நேற்று அதிகாலை பாதுகாப்பு வட்டாரங்களிலும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடத்திலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டயஸ்போராக்களுக்கு அடிபணிந்து வரும் அநுர அரசு - கடுமையாக சாடும் நாமல் எம்.பி

டயஸ்போராக்களுக்கு அடிபணிந்து வரும் அநுர அரசு - கடுமையாக சாடும் நாமல் எம்.பி

அரசல் புரசலாகச் செய்திகள்

பின்னர் மயிலிட்டித் துறைமுக அபிவிருத்திப் பணிகளுக்காக எந்த வாகனத் தொடரணியும் இல்லாமல் தனி வாகனத்தில் ஜனாதிபதி சென்று இறங்கிய போதே, ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் தான் தங்கியிருந்தார் என்ற விடயம் புலனாய்வு அதிகாரிகளுக்கும் அரச வட்டாரங்களுக்கும் தெரியவந்துள்ளது.

யாழ். விஜயத்தில் புலனாய்வு அதிகாரிகளை அதிர வைத்த ஜனாதிபதி அநுர | Intelligence Officials Shocked Anura Jaffna Visit

அநுரகுமார ஜனாதிபதியாகப் பதவியேற்பதற்கு முன்னர், யாழ்ப்பாணத்துக்கு வரும் போதெல்லாம் தட்டாதெருச் சந்திக்கு அருகாக உள்ள வீடொன்றில் தங்கியிருப்பதே வழமை.

இம்முறையும் அந்த வீட்டில் சென்றே தங்கியிருந்துள்ளார் என்று தெரியவருகின்றது. ஜனாதிபதிக்கும் அரச புலனாய்வு அதிகாரிகளுக்கும் இடையில் ஒரு இடைவெளி காணப்படுகின்றதாக அண்மைக்காலமாக அரசல் புரசலாகச் செய்திகள் வெளிவந்திருந்தன.

ஜனாதிபதிக்கு மிக நெருக்கமான பாதுகாப்புப் படையணியே அவரின் பாதுகாப்பு விடயங்களை முற்றாகக் கையாண்டு வருவதாகவும் கூறப்படுகின்றது. இந்தத் தகவல்களை உண்மையாக்கும் வகையிலேயே இந்தச் சம்பவமும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மக்களின் 30 வருட கால கசப்பான அனுபவங்களை போக்க வேண்டும் : கடற்றொழில் அமைச்சர்

மக்களின் 30 வருட கால கசப்பான அனுபவங்களை போக்க வேண்டும் : கடற்றொழில் அமைச்சர்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025