ஆயுள் தண்டனையில் தப்பிய பிள்ளையான் : TMVPயின் இராணுவ பிரிவை தேடும் புலனாய்வுத் துறை
முன்னாள் இராஜாங்க அமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
2025 ஏப்ரல் 8 அன்று மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட அவர், தற்போது கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் விசாரணை செய்யப்பட்டு வருகிறார் .
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பாக மட்டக்களப்பில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், அவரது சட்டத்தரணிகள், இந்த கைது மற்றும் தடுப்புக் காவல் அவரது அடிப்படை உரிமைகளை மீறுவதாகக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
இவ்வாறான பின்னணியில் சர்வதேசத்தின் கவனத்தை பெற்றுள்ள ஈஸ்டர் ஞாயிறு வழக்கின் முன்னேற்றங்களை அரசாங்கம் வெளிப்படுத்தி வருகின்ற நிலையில், பிள்ளையானின் அரசியல் கட்சியான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் (TMVP) கட்சியில் இராணுவ பிரிவு இருந்ததாகவும் அதனை இலங்கை புலனாய்வுத் துறை தேடிவருவதாகவும் கூறப்படுகிறது.
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், TMVP தலைவருமான பிள்ளையானின் சிறை தண்டனை மற்றும் அதனால் அரசாங்கம் எதிர்கொண்டுள்ள சவால்கள் தொடர்பிலும் விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் “செய்திகளுக்கு அப்பால்” நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
