வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க உத்தேசம்
மின்சாரக் கட்டண திருத்தத்தின் மூலம் வெதுப்பக உற்பத்திகளின் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
சங்க உறுப்பினர்களுடனான கலந்துரையாடலுக்கு பின், விலை திருத்தம் செய்யும் முறை அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
விலை அதிகரிப்பு
அத்தோடு, வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலைகளை திருத்துவது குறித்து பரிசீலிக்கவும் உணவகங்கள் மற்றும் வெதுப்பக உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

மின்சார கட்டணத்தை 18 வீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று அனுமதி வழங்கியுள்ளது.
திருத்தப்பட்ட கட்டணங்கள் ஜூன் 30, 2024 வரை நடைமுறையில் இருக்கும் என்பதுடன், இது இந்த ஆண்டுக்கான மூன்றாவது மின் கட்டணத் திருத்தம் இது என்பது குறிப்பிடத்தக்கது.