உயர்கல்வி வாய்ப்புகளை தவறவிட்ட மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்! அரசாங்கத்தின் புதிய திட்டம்
2023, 24, 25 ஆகிய ஆண்டுகளில் தனியார் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறாத மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்களை வழங்கும் திட்டம் அரசாங்கத்தால் தொடங்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 1.5 மில்லியன் ரூபாய் வரையிலான கடனை 7 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் கால அவகாசம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், பல்கலைக்கழக ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட 16 தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டம் அல்லது தேசிய அளவிலான பட்டயப் படிப்புக்காக 130 பாடப்பிரிவுகளைப் படிக்கும் வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
திட்டத்தின் முதற்கட்டம்
இலங்கை முழுவதும் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் இந்த திட்டத்தின் முதற்கட்டம், செப்டம்பர் 3ஆம் திகதி களுத்துறை மாவட்டச் செயலகத்திலிருந்து தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சு, மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேசச் செயலகங்கள் இணைந்து இத்திட்டத்தை ஏற்பாடு செய்யும் என களுத்துறை மாவட்டச் செயலாளர் சுனந்த ஹெரத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4 Evening