வட்டி வீதங்கள் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் தகவல்
நாட்டின் வட்டி விகிதங்கள் மேலும் குறைக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே இலங்கை மத்திய ஆளுநர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 2025 ஆம் ஆண்டு இலங்கையின் பணவீக்கம் (Inflation in Sri Lanka) மேலும் உயரக்கூடும் என்றும் பணவீக்கத்தை 5 சதவீதத்தில் பேண எதிர்பார்க்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பணவீக்க விகிதம்
தற்போதைய எதிர்மறை பணவீக்க விகிதம் இந்த ஆண்டின் நடுப்பகுதியில் நேர்மறை நிலைகளை எட்டக்கூடும்.
இதனால் நாட்டின் வட்டி விகிதங்கள் மேலும் குறைக்கப்படும் என்று மத்திய வங்கி ஆளுநர் மேலும் கூறியுள்ளார்.
அத்துடன் பொதுமக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பரிவர்த்தனைகளை எளிதாக்க டிஜிட்டல் கட்டண தளத்தை செயல்படுத்த உள்ளதாகவும் மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
உற்பத்தி மற்றும் சேவை
இதேவேளை கடந்த டிசம்பர் மாதத்தில் நாட்டின் உற்பத்தி மற்றும் சேவை நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதன்படி, உற்பத்தித் துறைக்கான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 57.2 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் உற்பத்திக்கான சுட்டெண் 2024 நவம்பரில் 53.3 ஆக பதிவாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |