இலங்கையில் நாயொன்றினால் நடந்த சுவாரசியமான சம்பவம்!
Police
Arrest
Balangoda
SriLanka
Labrador
By Chanakyan
வீடொன்றில் வளர்க்கப்பட்ட நாய் ஒன்றை திருடி 7,500 ரூபாய்க்கு அடகு வைத்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் பலாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பலாங்கொடை - கிரிமெட்டிதென்ன பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டள்ளனர்.
பொலிஸாரினால் மேற்கொண்ட விசாரணையின் போது லெப்ரடோர் வகையைச் சேர்ந்த குறித்த நாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட நபர்கள் நேற்று பலாங்கொடை நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.