யுத்தத்தின் பின்னர் யாழ். இலங்கை வங்கியில் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச பிரிவு!
40 வருடங்களின் பின்னர் மீண்டும் இலங்கை வங்கி யாழ்ப்பாண தலைமையில் கிளையில் சர்வதேச பிரிவானது ஆரம்பிக்கப்பட்டது.
இதன்மூலம் வாடிக்கையாளர்கள் தமது சேவைகளை இலகுவாகவும், விரைவாகவும் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த பிரிவானது யுத்தத்திற்கு முன்னர் இயங்கி வந்த நிலையில் யுத்த காலத்தில் இடை நிறுத்தப்பட்டது.
சர்வதேச வர்த்தகம்
இவ்வாறான பின்னணியில் இன்று மீண்டும் அந்த பிரிவானது, வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி யாழில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

4 தசாப்தங்களாக தலைமை காரியாலயத்தில் பெறக் கூடியதாக இருந்த சர்வதேச பிரிவின், சர்வதேச வர்த்தகம் தொடர்பான நிதிசார் சேவைகளை இன்றுமுதல் யாழ். கிளையில் மீண்டும் பெறக்கூடிய வாய்ப்பு இதனால் ஏற்பட்டுள்ளது.
இலங்கை வங்கியின் யாழ். தலைமை காரியாலய முகாமையாளர் நே.சுஜாத்தா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை வங்கியின் வடக்கு மாகாண உதவி முகாமையாளர் வீ.சிவானந்தன் கலந்து சிறப்பித்ததுடன், இலங்கை வங்கியின் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |