வடக்கில் வலுக்கும் ஆதரவு: நீதிக்கான மாபெரும் கையெழுத்து போராட்டம்

Jaffna Vavuniya chemmani mass graves jaffna
By Thulsi Aug 30, 2025 06:27 AM GMT
Report

புதிய இணைப்பு

தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளும் பொது அமைப்புகளும் ஒன்றிணைந்து செம்மணி புதைகுழிக்கு நீதி வேண்டி கையெழுத்துப் போராட்டம் ஒன்றினை வடக்கு கிழக்குத் தழுவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கும், பாதுகாக்கும் சபைக்கும் அனுப்புவதற்காக இந்த கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்ட வருகின்றது.

அந்தவகையில் இந்த போராட்டமானத்தின் பகுதி வேலைத்திட்டம் இன்றையதினம் நவாலி மற்றும் மானிப்பாய் பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடக பேச்சாளர் குருசாமி சுரேந்திரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ப.கஜதீபன், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் சமூக மட்ட பொது அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு கையொப்பங்களை பதிவு செய்தனர்.

வடக்கில் வலுக்கும் ஆதரவு: நீதிக்கான மாபெரும் கையெழுத்து போராட்டம் | International Investigation Mass Graves Genocide

கிளிநொச்சி

செம்மணி உட்பட வடக்கு கிழக்கில் காணப்படும் மனித புதைகுழிகள் மற்றும் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்த வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கையெழுத்த போராட்டம் இன்று (30) கிளிநொச்சி மாவட்டத்திலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தமிழ்த்தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இக் கையெழுத்து போராட்டமானது கிளிநொச்சி கனகபுரம் வீதி பொதுச் சந்தைக்கு முன்பாக இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது தமிழரசு மாவட்ட பொது செயலாளர் விஜய பாலன் கட்சிகளின் உறுப்பினர்கள் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர். 

முதலாம் இணைப்பு

🛑 யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் (Jaffna) வடக்கு - கிழக்கு மனிதப் புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்கு நீதி கோரி கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த நீதி கோரி கையெழுத்து போராட்டம், யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று (29) காலை முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு, கிழக்கு மண்ணில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் மற்றும் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலைகளுக்கும் நீதியைக் கோருவதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கையெழுத்துச் சேகரிக்கும் செயற்பாடு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும், இன்று ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரன், சுகாஸ், சர்வேஸ்வரன், கஜதீபன் உள்ளிட்ட அரசியல்வாதிகள் பலர் நிகழ்வை ஆரம்பித்து முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் வலுக்கும் ஆதரவு: நீதிக்கான மாபெரும் கையெழுத்து போராட்டம் | International Investigation Mass Graves Genocide

வடக்கில் வலுக்கும் ஆதரவு: நீதிக்கான மாபெரும் கையெழுத்து போராட்டம் | International Investigation Mass Graves Genocide

வடக்கில் வலுக்கும் ஆதரவு: நீதிக்கான மாபெரும் கையெழுத்து போராட்டம் | International Investigation Mass Graves Genocide

வடக்கில் வலுக்கும் ஆதரவு: நீதிக்கான மாபெரும் கையெழுத்து போராட்டம் | International Investigation Mass Graves Genocide

வடக்கில் வலுக்கும் ஆதரவு: நீதிக்கான மாபெரும் கையெழுத்து போராட்டம் | International Investigation Mass Graves Genocide

மனைவியின் தேவைக்காக அரச ஊழியர்களை பணியமர்த்திய சஜித்! ஆரம்பமாகவுள்ள விசாரணை

மனைவியின் தேவைக்காக அரச ஊழியர்களை பணியமர்த்திய சஜித்! ஆரம்பமாகவுள்ள விசாரணை

🛑 முல்லைத்தீவு

செம்மணி உட்பட வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனிதப் புதைகுழிகளுக்கானதும், நடைபெற்ற இனப்படுகொலைகளுக்குமான சர்வதேச நீதி கோரிய கையெழுத்துப் போராட்டம் முல்லைத்தீவிலும் இடம்பெற்றுள்ளது.

குறித்த போராட்டமானது இன்று (29) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு, கிழக்கு மண்ணில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் மற்றும் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலைகளுக்கும் நீதியைக் கோருவதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கையெழுத்துச் சேகரிக்கும் செயற்பாடு வடக்கு, கிழக்க மாகாணங்களின் பல பகுதிகளிலும் இன்றைய தினம் இடம்பெற்று வருகின்றது.

இதனடிப்படையில், குறித்த கையெழுத்துச் சேகரிக்கும் செயற்பாடு முல்லைத்தீவு நகரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்தக் கையெழுத்திடும் செயற்பாட்டில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வட மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் சிவநேசன்(பவன்), கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் சின்னராசா லோகேஸ்வரன், மத தலைவர்கள், கரைதுறைப்பற்று பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கமலநாதன் விஜிந்தன், பிரதேசசபை உறுப்பினர்கள் தவராசா அமலன்,தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ், மாந்தை கிழக்கு பிரதேசசபையின் உப தவிசாளர் வரதன் மற்றும் சமூக செயற்ப்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் வலுக்கும் ஆதரவு: நீதிக்கான மாபெரும் கையெழுத்து போராட்டம் | International Investigation Mass Graves Genocide

வடக்கில் வலுக்கும் ஆதரவு: நீதிக்கான மாபெரும் கையெழுத்து போராட்டம் | International Investigation Mass Graves Genocide

வடக்கில் வலுக்கும் ஆதரவு: நீதிக்கான மாபெரும் கையெழுத்து போராட்டம் | International Investigation Mass Graves Genocide

நடுக்கடலில் பற்றி எரியும் உக்ரைனின் மிகப்பெரிய போர்க் கப்பல் - ஆட்டம் காட்டும் ரஷ்யா

நடுக்கடலில் பற்றி எரியும் உக்ரைனின் மிகப்பெரிய போர்க் கப்பல் - ஆட்டம் காட்டும் ரஷ்யா

🛑 கிளிநொச்சி

செம்மணி உட்பட வடக்கு கிழக்கில் காணப்படும் மனித புதைகுழிகள் மற்றும் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்த வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கையெழுத்த போராட்டம் இன்று (29) கிளிநொச்சி மாவட்டத்திலும் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்த்தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இக் கையெழுத்து போராட்டமானது கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்பாக இன்று காலை 11 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பங்காளி கட்சிகளின் உறுப்பினர்கள் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர். 

வடக்கில் வலுக்கும் ஆதரவு: நீதிக்கான மாபெரும் கையெழுத்து போராட்டம் | International Investigation Mass Graves Genocide

வடக்கில் வலுக்கும் ஆதரவு: நீதிக்கான மாபெரும் கையெழுத்து போராட்டம் | International Investigation Mass Graves Genocide

வடக்கில் வலுக்கும் ஆதரவு: நீதிக்கான மாபெரும் கையெழுத்து போராட்டம் | International Investigation Mass Graves Genocide

அத்துரலியே ரத்தன தேரருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

அத்துரலியே ரத்தன தேரருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

🛑 வவுனியா

செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனித புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்காக சர்வதேசத்திடம் நீதி கோரி கையெழுத்து போராட்டமானது இன்றையதினம் வவுனியா, இலுப்பையடியில் இடம்பெற்றிருந்தது.

தமிழ்த்தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் குறித்த போராட்டமானது இடம்பெற்றிருந்தது. தமிழ்த்தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் குறித்த போராட்டமானது இடம்பெற்றிருந்தது.

இப்போராட்டத்தில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாநகர மேயர் சு.காண்டீபன் உட்பட பலரும் கலந்து கொண்டு கையொபப்மிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் வலுக்கும் ஆதரவு: நீதிக்கான மாபெரும் கையெழுத்து போராட்டம் | International Investigation Mass Graves Genocide

வடக்கில் வலுக்கும் ஆதரவு: நீதிக்கான மாபெரும் கையெழுத்து போராட்டம் | International Investigation Mass Graves Genocide

வடக்கில் வலுக்கும் ஆதரவு: நீதிக்கான மாபெரும் கையெழுத்து போராட்டம் | International Investigation Mass Graves Genocide

மக்களினதும் போராளிகளினதும் தியாகமே ஐ.நா சபையின் கதவை தட்டியது : செல்வம் எம்.பி

மக்களினதும் போராளிகளினதும் தியாகமே ஐ.நா சபையின் கதவை தட்டியது : செல்வம் எம்.பி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026