மூதூர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விவகாரம்: சர்வதேச விசாரணையை வலிறுத்தும் தமிழ் எம்.பி
சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும் என்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்கி அரசாங்கம் சர்வதேசத்தை ஏமாற்றியுள்ளது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் (Selvarajah Kajendren) தெரிவித்துள்ளார்.
மூதூரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது கைது செய்யப்பட்டவர்களின் நிலை தொடர்பில் இன்று (16) சிரேஷ்ட சட்டத்தரணி க.சுகாஷ் (Kanagaratnam Sugash) செய்த சமர்ப்பணத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “இந்த மாதம் தமிழர்களுக்கு வலி சுமந்த மாதமாகும் தமிழர்களை 15 வருட காலமாக ஏமாற்றி வரும் இந்த அரசு முள்ளி வாய்க்கால் இனப்படுகொலை தொடர்பாக அவர்களை நினைவு கூற விடாமல் தடுத்துள்ளது.
பொய்யான குற்றச்சாட்டு
இந்த நிலையில், மூதூரில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் ஐசிசிபிஆர் தொடர்பான அறிக்கையை காவல்துறையினரிடம் நீதிமன்றம் கோரியுள்ளது.
இது தொடர்பில் சமர்ப்பணங்களை முன்வைத்து நீதிமன்ளில் வாதாடிய சிரேஷ்ட சட்டத்தரணி சுகாஷ் மற்றும் முஸ்லிம் சட்டத்தரணிகளுக்கு இந்த நேரத்தில் நன்றிகளை தெரிவிக்கிறேன்.
பொய்யான குற்றச்சாட்டை காவல்துறையினர் முன்வைத்து நீதிமன்றில் தடை உத்தரவை பெற்று நீதிமன்றை ஏமாற்றியுள்ளனர், தற்போது நீதிமன்றம் தடையை நீக்கியுள்ளது.
வலி சுமந்த மாதம்
முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது அவர்கள் உணவை ஆயுதமாக பயன்படுத்தி கஞ்சியை பட்சிலம் குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளனர்.இது போன்ற உள ஆற்றுப்படுத்தளுக்காக இதனை நினைவு கூறுகின்றனர்.
தமிழர்கள் இந்த மாதத்தில் களியாட்டங்களை தவிர்த்து உணர்வு பூர்வமாக நினைவேந்தலில் ஈடுபடுகின்ற வலி சுமந்த மாதமாக காணப்படுகிறது.
உள்ளக பொறி முறை மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது ஒற்றையாட்சி முறையை நீக்கி சமஷ்டியை கொண்டு வரவேண்டும் என்பதுடன் தமிழ் தேச மக்கள் எதிர்வருகின்ற அதிபர் தேர்தலை புறக்கணிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |