செம்மணி மனிதப் புதைகுழி குறித்து பன்னாட்டு விசாரணை : ஜெனீவாவுக்கு புதிய கடிதம்
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி குறித்து பன்னாட்டு விசாரணை மேந்கொள்ளுமாறு வலியுறுத்தி ஜெனீவாவுக்கு புதிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக சிவில் செயற்பாட்டாளரான இ.நா.ஸ்ரீஞானேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “இனப்படுகொலை விசாரணையை மிகத் தெளிவாக முன்னிறுத்தி எங்களுடைய கடிதம் அனுப்பப்பட்டிருப்பதுடன் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு தொடர்பாக பன்னாட்டு நெறிமுறையை பின்பற்றுவதற்கான நெறிமுறையைக் கண்டுபிடித்து அந்த நெறிமுறையினை சிறிலங்காவில் இனப்படுகொலையின் ஒரு சான்றாக உருவாகியிருக்கின்ற செம்மணியின் அகழ்வு நடவடிக்கைகளில் பிரயோகிக்க வேண்டும் என்பதை முன்னிறுத்தி இந்த கடிதம் அனுப்பப்பட்டிருக்கின்றது.
செம்மணி மனிதப் புதைகுழியில் அகழப்படுகின்ற சான்று பன்னாட்டு நெறிமுறைக்கமைய அகழப்பட்டு, அடையாளப்படுத்தப்பட்டு, ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்பது தான் எங்களுடைய ஆரம்பக்கட்ட கோரிக்கையாக இருக்கின்றது.
ஈழத்தமிழர்கள் மீது இனப்படுகொலையை நிகழ்த்துவதற்கு முழுப்பொறுப்புடையது இலங்கை அரசு. ஆகவே குற்றஞ்செய்த தரப்பான சிறிலங்கா அரசு விசாரணையை முன்னெடுக்க முடியாது. எனவே இந்த விடயத்தில் பன்னாட்டு விசாரணையை கோரி நிற்கின்றோம்.
பன்னாட்டு கண்காணிப்பின் கீழ் இந்த சான்றுகள் மிகச் சரியாக ஆவணப்படுத்தப்படும் போது பன்னாட்டு விசாரணைகளுக்கு குறித்த சான்றுகளை சமர்ப்பிக்கப்படும் போது சான்றுகள் மீது யாரும் கேள்வியெழுப்ப முடியாது.” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

