பலஸ்தீன் இனப்படுகொலையை நிறுத்த சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும் : பிரியங்கா காந்தி வலியுறுத்து
இன்று உலகளவில் பெரும் பேசுபொருளாக இருக்கின்ற விடயம் இஸ்ரேல் - பலஸ்தீனிடையே இடம்பெற்று வருகின்ற போர் நிலையாகும்.
இந்த போர் தொடர்பாக பலநாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
அந்த வரிசையில், இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தியும் "பலஸ்தீனத்தில் நடைபெறும் இனப் படுகொலையை உடனடியாக தடுக்க சர்வதேச சமூகம் போர் நிறுத்தத்தை வலியுறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்."
உக்கிரமடையும் போர்
மேலும், அவர் தனது டுவிட்டர் தளத்திலும் இது தொடர்பான பதிவொன்றினையும் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறியதாவது,"நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் இந்தப் போரில், பலஸ்தீனத்தில் இதுவரை சுமார் 5,000 குழந்தைகள் உட்பட 10,000 பொதுமக்கள் வரை படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பல நூறு குடும்பங்களுக்கும் மேல் அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனைகள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மீது வெடிகுண்டுகள் வீசப்படுகின்றன, அகதி முகாம்கள் குறிவைக்கப்பட்டு தாக்கப்படுகின்றன,
சுதந்திர உலகின் தலைவர்கள்
இத்தகைய கொடூரங்கள் அரங்கேறுகையில், சுதந்திர உலகின் தலைவர்கள் என்று கூறிக்கொள்ளும் தலைவர்கள் பலஸ்தீனத்தில் நடைபெற்று வரும் இந்த இனப்படுகொலைக்கு நிதி வழங்கி, ஆதரவளித்து வருவது வேதனையை அளிக்கிறது.
இதனை நிறுத்திக்கொண்டு, குறைந்தபட்ச நடவடிக்கையாக சர்வதேச சமூகம் போர் நிறுத்தத்தை வலியுறுத்த வேண்டும்,
It is horrific and shameful beyond words that almost 10,000 civilians of which nearly 5000 are children have been massacred, whole family lines have been finished off, hospitals and ambulances have been bombed, refugee camps targeted and yet the so-called leaders of the “free”…
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) November 5, 2023
தற்போது உடனடியாக இதனைச் செய்யாவிட்டால் எந்த விதமான தார்மிக அறத்தையும் பேணாமல் உலக அழிவை கண்முன் காண நேரிடும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.