இஸ்ரேல்-ஹமாஸ் போரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி
United Nations
Israel
Palestine
Israel-Hamas War
Gaza
By Shadhu Shanker
உக்கிரமடைந்து வரும் இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் இதுவரையில் 3320 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக பலஸ்தீன் அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 7ம் திகதி தொடங்கிய தாக்குதலானது 25 நாட்களாக தொடர்ந்த வண்ணம் உள்ளது .
இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளதோடு ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகியுள்ளனர்.
9000 க்கும் அதிகமானோர்
இந்த தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் என அப்பாவி பொது மக்கள் பாதிக்கப்படுவதால் ஐ .நா வும் உலக நாடுகளும் போரை நிறுத்துமாறு வலியுறுத்துகின்றனர்.
இந்நிலையில் இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் இதுவரையில் 9000 க்கும் அதிகமானோர் உயிரிழந்ததுள்ளனர். இதில் 3320 குழந்தைகளும் அடங்குவர்.
மேலும் 20,000 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

10ம் ஆண்டு நினைவஞ்சலி