ரஸ்யா மீது ஐரோப்பிய ஒன்றியம் பாரிய பொருளாதார தடை- குறி வைக்கப்படும் மூலோபாயத்துறை!
rusia
ukraine
war
international
european union
By Kalaimathy
ரஸ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் 'பாரிய பொருளாதார தடைகளை” விதிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனின் இதனை தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல், ஐரோப்பிய தலைவர்களுக்கு ஒப்புதலுக்காக "பாரிய மற்றும் இலக்கு வைக்கப்பட்ட தடைகளின் தொகுப்பு" வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இந்த தடைகள் மூலம், முக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் சந்தைகளுக்கான அணுகலைத் தடுத்து ரஸ்யாப் பொருளாதாரத்தின் மூலோபாயத் துறைகள் குறிவைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ரஸ்யாவின் பொருளாதாரத் தளத்தையும் நவீனமயமாக்கும் திறனையும் பலவீனப்படுத்தப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை ரஸ்யா இதுவரை கண்டிராத கடுமையான தடைகள் விதிக்கப்படும் என்று இங்கிலாந்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 8 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்