இலங்கை அரசின் உண்மை முகத்தை சர்வதேசம் புரிந்துகொள்ள வேண்டும்: ரவிகரன் பகிரங்கம்
இன்றும் வேறு வேறு வடிவங்களில் இனப்படுகொலை நடந்து கொண்டு தான் இருக்கின்றது என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்..
அதாவது நில அபகரிப்பு, மதத் திணிப்பு, கலை கலாசார அழிப்பு என இன அழிப்பு இடம்பெற்றுக்கொண்டிருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் ”முள்ளிவாய்க்கால் அவலம் என்பது உலகம் முழுவதும் அறிந்த விடயம். மே 18 தமிழர்களை இனப்படுகொலை செய்த நாளாக பிரகடனப்படுத்தி நாங்கள் அனுஷ்டித்து வருகின்றோம்.
அரசாங்கத்தினுடைய இனவாதிகளுக்கு என்றைக்கும் தமிழர்களை தாங்கள் துன்புறுத்திய விடயங்களை நாங்கள் மீட்டிப் பார்க்க விடுவதில்லை.
வடக்கிலே சிறிய பிரச்சினைகள் இருந்தாலும் கூட கிழக்கிலே இரவிலே அந்தப் பெண்களைக் கஞ்சி கொடுத்ததற்காக கைது செய்து சித்திரவதை நடத்தியிருந்தது இந்த அரசு.
இந்த அரசு இப்படித்தான் என்பதை சர்வதேசம் புரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கை அரசு எங்களுக்கு ஒரு தீர்வும் தராது. எங்களை அடக்க வேண்டும் ஒடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் இன்றும் இருக்கின்றது.“ எனத் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |