யாழ்.வர்த்தக கண்காட்சியில் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி
யாழில் இடம்பெற்றுவரும் வர்த்தக கண்காட்சியில் உள்ளூர் உற்பத்தியாளர்கள் பின் தள்ளப்பட்டுள்ளதாக உள்ளுர் உற்பத்தியாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
யாழ்ப்பாண வர்த்தக தொழில்துறை மன்றத்தின் ஏற்பாட்டில், 15 வது ஆண்டாக நடைபெறும் யாழ் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியானது கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு கடந்த (24.01.2025) யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் காலை 11 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சியில் பல்வேறுபட்ட வழங்குநர்களால் 350 க்கு மேற்பட்ட காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டு பொருட்கள் காட்சி படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், யாழில் உள்ள உள்ளூர் உற்பத்தியாளர்கள் குறித்த வர்த்தக கண்காட்சியில் வழங்கப்படும் இடம் குறித்து சில விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
அதன்போது, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் அசுத்தமானதாக காணப்படுகின்றதாகவும் இடவசதியற்று காணப்படுவதாகவும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளார்கள்.
இது தொடர்பான முழுமையான விடயங்களை கீழ் உள்ள காணொளியில் காண்க...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |