நீர் விநியோகத்திற்கு தடை: மக்களுக்கு பேரிடி
வறட்சியான காலநிலை காரணமாக தொடர்ச்சியான நீர் விநியோகத்திற்கு தடைகள் ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் அனோஜா களுஆராச்சி தெரிவித்துள்ளார்.
அத்தோடு, சில பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் தண்ணீர் வழங்க வேண்டும் என்றும் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், 1939 என்ற அவசர அழைப்பு இலக்கத்தின் ஊடாக நீர் விநியோகத் தடைகள் தொடர்பில் முறைப்பாடுகளை சமர்ப்பிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முறைப்பாடுகள்
அதன்படி, நாளொன்றுக்கு சுமார் 2000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, அம்பத்தளை மற்றும் பியகம நீர் நீரேற்று நிலையங்களுக்குள் சவர் நீர் உட்புகுவதைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட தற்காலிக உப்புத் தடுப்பு தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |