யாழ் பல்கலையில் தீபச்செல்வனின் பயங்கரவாதி நூல் அறிமுகவிழா
Tamils
Jaffna
University of Jaffna
By Shadhu Shanker
ஈழத்து எழுத்தாளரும், யாழ் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றியச் செயலாளருமான தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் அறிமுகவிழா இடம்பெற்றுள்ளது.
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ் பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம்(10) இடம்பெற்ற நிகழ்வுக்கு மாணவர் ஒன்றியத் தலைவர் கே. துவாரகன் தலைமை தாங்கினார்.
பயங்கரவாதி நாவல்
பிரதம விருந்தினராக கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராமும், சிறப்பு விருந்தினராக அரசறிவியல் துறைத் தலைவர் கே.ரி. கணேசலிங்கம் கலந்துகொண்டனர்.
நாவல் விமர்சனத்தை சைவசித்தாந்த்தத் துறையை சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் தி. செல்வமனோகரன் வழங்கினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்....! |
மரண அறிவித்தல்