கிரீன்லாந்து விவகாரம் அமெரிக்காவிற்கு சீனா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
கிரீன்லாந்தை ஆக்கிரமிப்பதற்கு சீனாவின் பெயரை ஒரு காரணமாகப் பயன்படுத்துவதை அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சீனா கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவான் ஜாகுன் அமெரிக்காவை எச்சரித்து இந்த அறிக்கையை வெளியிட்டதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சர்வதேச சட்டத்தின்படி நடவடிக்கைகள்
ஆர்க்டிக் பிராந்தியத்தில் அதன் நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தின்படி மேற்கொள்ளப்படுகின்றன என்று சீனா மேலும் குறிப்பிட்டது.

ரஷ்யா மற்றும் சீனாவை எதிர்கொள்ளும் போது கிரீன்லாந்து அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அவசியம் என்று ட்ரம்ப் நம்புகிறார், மேலும் எந்த விலை கொடுத்தாவது அதை கையகப்படுத்துவதாக ட்ரம்ப் பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார்.
எனினும் ட்ரம்பின் இந்த திட்டத்திற்கு அமெரிக்காவுடன் இதுகாலவரை சேர்ந்தியங்கிய ஐரோப்பிய நாடுகளே கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |