யாழ் உள்ளிட்ட பகுதிக்கு மீண்டும் மழை - நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் மிதமானது முதல் சற்று கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை தலைவர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் நேற்று வெளியிட்டுள்ள பதிவில் மேலும் குறிப்பிடுகையில், எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கையின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு வளிமண்டலத்தில் உறுதியற்ற தன்மை ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமானது முதல் சற்று கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
நிலவும் குளிரான நிலைமை
அதேவேளை இக்காலப்பகுதியில் மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் தென் மாகாணங்களுக்கும் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

எனவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நெல் அறுவடைச் செயற்பாடுகளை மேற்கொள்ளும் விவசாயிகளும் அறுவடை செய்த நெல்லை உலர விடும் விவசாயிகளும் இந்த மழை நாட்களைக் கருத்தில் கொண்டு செயற்படுவது சிறந்தது.
வெங்காயம் மற்றும் மரக்கறிச் செய்கையாளர்களும் இந்த மழை நாட்களைக் கருத்தில் கொள்வது சிறந்தது.
அதேவேளை தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் குளிரான நிலைமை அடுத்த சில நாட்களுக்கு சற்று அதிகரித்துக் காணப்படும் என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |