ஹொரணை விபத்தில் உயிரிழந்த இளைஞன் நாட்டுக்குக் கற்றுக் கொடுத்த பாடம்!
களுத்துறை, ஹொரணை - இலிம்பா சந்திக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த 2 இளைஞர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹொரணை தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை - ஹொரணை இலிம்பா சந்திக்கு அருகில் போட்டித்தன்மையுடன் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களில் சென்ற இரண்டு இளைஞர்கள் கார் மீது மோதியதில் இந்த பயங்கர விபத்து ஏற்பட்டிருந்தது.
துரதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழந்தவர் ஹொரணை குருகொட பகுதியைச் சேர்ந்த 'ஷாஷி' எனப்படும் சசிந்து தேவ்மித் பிரசன்ன என்ற பதினேழு வயது இளைஞர் என்பதை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆபத்தான நிலை
இரண்டு மோட்டார் சைக்கிள்களும் இங்கிரியவிலிருந்து ஹொரணை நோக்கி அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, ஹொரணையிலிருந்து இங்கிரிய நோக்கிச் சென்ற கார் ஒன்று பக்கவாட்டுப் பாதையில் திரும்ப முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வாகனத்தின் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டது.
விபத்தில் படுகாயமடைந்த இளம் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இருவரும் ஆரம்பத்தில் ஹொரணை மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு ஆபத்தான நிலையில் இருந்த பதினேழு வயது இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்தில் சிக்கிய 21 வயதுடைய மற்றைய இளைஞர் தற்போது ஹொரணை ஆதார மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக விசாரணை
இந்த மோதலில் இரண்டு மோட்டார் சைக்கிள்களுக்கும் காருக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது. மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஹொரணை காவல்துறையினர் காரின் சாரதியை கைது செய்துள்ளனர்.

இந்த துயர சம்பவத்துடன், சமூக ஊடகங்களில் உணர்ச்சிபூர்வமான பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.
வேகத்தால் ஏற்படும் உயிருக்கு ஆபத்து, விபத்து ஏற்படும் போது தங்களைச் சுற்றியுள்ள நண்பர்கள் கூட புறக்கணிக்கப்படுவது, இறுதியில் இறந்தவரின் பெற்றோருக்கு ஏற்படும் நித்திய துக்கம் குறித்து இளைய தலைமுறையினருக்கு ஒரு வலுவான முன்மாதிரியாக அமைகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |