காவல்துறையினரின் சர்ச்சைக்குரிய விசாரணை: பாதுகாப்பு அமைச்சர் விடுத்த பணிப்புரை
கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் இளைஞனையும் யுவதியையும் காவல்துறையினர் துன்புறுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.
குறித்த விடயத்தை பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தனது x கணக்கில் பதிவிட்டுள்ளார்.
பணிப்புரை
ஊடகங்கள் செய்தி வெளியிட்டதை தொடர்ந்தே சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு அமைச்சர் காவல்துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
காவல்துறையினர், இளைஞனும் யுவதியும் பயணித்த வாகனத்தை நிறுத்தி அவர்களின் பயணப்பொதிகளை சோதனையிட்டுள்ளதுடன் இளைஞனை தனியாக அழைத்துச் சென்று உடல் சோதனை செய்ய வேண்டும் என வற்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
I was informed about an alleged incident where 2 youths faced an intrusive stop and search by the Police. An investigation was ordered yesterday and stern action will be taken against any wrongdoers, if identified, to ensure accountability and justice.#lka #publicsecurity
— Tiran Alles (@TiranAlles) January 5, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |