ISIS உடன் தொடர்பிலிருந்த 20 இலங்கையர்களிடம் விசாரணை
sri lanka
investigation
People
ISIS
By Shalini
ISIS தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டின் பேரில் 20 இலங்கையர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அண்மையில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.ஸ் தீவிரவாத சந்தேக நபர் ஒருவரின் தொலைபேசியில் 702 இலங்கையர்களின் தொடர்பு இலக்கங்கள் உள்ளிட்ட விபரங்கள் கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு பேணிய குற்றச்சாட்டின் பேரில் சுமார் 20 பேரிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த தொலைபேசி இலக்க விவகாரத்தின் அடிப்படையில் 20 சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.