80 இலட்சம் பெறுமதியான கார் திருட்டு...! சுற்றிவளைக்கப்பட்ட சந்தேக நபர்
என்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான கார் ஒன்றைத் திருடியமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யட்டகல, ஊரகஸ்மங்ஹந்திய பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (28-01-2026) அதிகாலை கெஸ்பேவ பிரதேசத்தில் ஊரகஸ்மங்ஹந்திய காவல் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றில் முன்னிலை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த திருட்டுச் சம்பவம் கடந்த செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து, ஊரகஸ்மங்ஹந்திய காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நேற்றைய தினம் ஆறு கிராம் 235 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் குறித்த கார் ஆகியவற்றுடன் மேற்படி சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, எல்பிட்டிய மற்றும் பத்தேகம காவல் பிரிவுகளில் இரண்டு முச்சக்கரவண்டிகளைத் திருடியமை மற்றும் ஹோமாகம காவல் பிரிவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களைத் திருடிய குற்றங்களுடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது.
இதன்பின்பு, சந்தேகநபர் எல்பிட்டிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது, ஏழு நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் ஊரகஸ்மங்ஹந்திய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை… 1 மணி நேரம் முன்