பின்னடைவை சந்திக்கும் சென்னை அணி - காயத்தால் வெளியேறும் முன்னணி வீரர்கள்
இந்த ஆண்டு ஐபிஎல் சுற்றுப்போட்டிகள் ஆரம்பமாக இன்னும் 2 மாதமே உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரர்கள் விளையாடுவதில் சந்தேகம் நிலவியுள்ளது.
கடந்த சுற்றில் முக்கிய வீரர்கள் காயம் காரணமாக பல்வேறு போட்டிகளில் விளையாடது போல், இம்முறையும் சிஎஸ்கே அணி வீரர்கள் காயமடைந்துள்ளமை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏற்கனவே 2 முக்கிய வீரர்கள் காயம் காரணமாக ஓய்வில் உள்ள நிலையில், தற்போது அந்த பட்டியலில் மேலும் ஒரு வெளிநாட்டு வீரர் இணைந்துள்ளார்.
ருத்துராஜ்
சென்னை அணியில் தொடக்க வீரர் ரூத்துராஜ் கெய்க்வாட் கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளதால், இந்திய டி20 அணியிலிருந்து விலகினார்.
தற்போது, அவர் காயத்திலிருந்து குணமடைந்து வரும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் ருத்துராஜ் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.
தீபக் சாஹர்
இதே போன்று சகலதுறை வீரரான தீபக் சாஹரை 14 கோடி ரூபாய் கொடுத்து சிஸ்கே அணி வாங்கியது.
ஆனால் , அவர் கடந்த சுற்றில் காயம் காரணமாக ஒரு போட்டியில் கூட விளையாடாத நிலையில், இம்முறையும் அவர் காயம் காரணமாக, ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சந்தேகமாகி உள்ளது.
ஜெமிசன்
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர் என்றால் டுவைன் பிரிட்டோரியஸ், மதிஷ் பதிராண மற்றும் கெயில் ஜெமிசன் ஆகிய 3 பேர் மாத்திரமே உள்ளனர்.
இதில் நியூசிலாந்து வீரர் ஜெமிசனுக்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் 6 மாதங்கள் துடுப்பாட்ட போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து ஜெமிசன் விலகி உள்ளார். இதனையடுத்து ஜெமிசனுக்கு பதில் வேறு ஏதேனும் வெளிநாட்டு வீரரை வாங்கும் நிலைக்கு சிஎஸ்கே தள்ளப்பட்டுள்ளது.
இதனால் தீபக் சாஹர், ருத்துராஜ் கெய்க்வாட் ஆகியோர் காயத்திலிருந்து குணமடைந்து வரவில்லை என்றால் சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்படகூடும்.
