இன்று முதல் நடைமுறைக்கு வரும் பேருந்து கட்டண திருத்தம்
புதிய இணைப்பு
வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் 0.55 சதவீதம் குறைக்கப்பட்ட நிலையில் இன்று (04) முதல் நடைமுறைக்கு வருகிறது.
ஜூலை 1ஆம் திகதி முதல் வருடாந்த பேருந்து கட்டணம் 2.5 சதவீதம் குறைக்கப்படும் என்று போக்குவரத்து ஆணைக்குழு முன்னர் அறிவித்திருந்தாலும், கடந்த மாதம் முதலாம் திகதி நடந்த எரிபொருள் விலை திருத்தத்தின்படி டீசல் விலை 15 ரூபா அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், புதிய எரிபொருள் விலை திருத்தத்தின்படி, பேருந்து கட்டணங்களை 0.55 சதவீதம் மட்டுமே குறைக்க முடியும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கட்டணக் குறைப்பு
புதிய கட்டண திருத்தத்தின் கீழ், பொது சேவைக்கான குறைந்தபட்ச பேருந்து கட்டணமான 27 ரூபா, இரண்டாவது கட்டணம் 35 மற்றும் 45 ரூபா கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பேருந்து கட்டணக் குறைப்பு பொது சேவைகள், அரை சொகுசு சேவைகள், சூப்பர் சொகுசு சேவைகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து பேருந்துகளுக்கும் பொருந்தும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: குறைகிறது பேருந்து கட்டணம்
பேருந்து கட்டணத்தை எதிர்வரும் 04 ஆம் திகதி நள்ளிரவு முதல் 0.55% ஆல் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (National Transport Commission (NTC) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
மாதாந்த எரிபொருள் விலை
அந்தவகையில், லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 289 ரூபாயாகும். மேலும் 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லிட்டரின் விலை 12 ரூபாயால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 305 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2025 ஆம் ஆண்டிற்கான வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் 2.5% ஆல் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட போதிலும் எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் மாதாந்த எரிபொருள் விலை திருத்திற்கமைவாக எரிபொருள் விலை அவதானிக்கப்பட்ட பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறைந்தபட்ச கட்டணத்தில் எந்தவொரு திருத்தமும் செய்யப்படவில்லை எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, ஆரம்ப பேருந்து பயணக் கட்டணமாக 27 ரூபாய் அறவிடப்படவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ஒருமுகத் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 18 மணி நேரம் முன்
