2024 ஐபிஎல் ஏலப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் சிஎஸ்கே வீரர்
சென்னை சூப்பர் கிங் அணியின் வீரர் முன்னாள் கேதார் ஜாதவ்-இன் பெயர் 2024 ஐபிஎல் ஏலத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது.
2024 ற்கான ஐபிஎல் மினி ஏலம் 19 ஆம் திகதி துபாயில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் கேதார் ஜாதவின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத ஆட்டம்
கேதார் ஜாதவ் தனக்கு தானே அதிக அடிப்படை ஏல விலையை நிர்ணயித்துக் கொண்டதே நீக்கப்பட்டதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் சகலதுறை வீரர் என்றாலும் நடு வரிசை வீரராகவே களமிறங்குவார்.
எனினும் இவரின் ஆட்டம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனலாம். 2018 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7.80 கோடிக்கு இவரை வாங்கியது.
அதனை தொடர்ந்து 4 ஆண்டுகள் சிஎஸ்கே அணியில் அவர் விளையாடினாலும், பல போட்டிகளின் தோல்விக்கு இவரின் துடுப்பாட்டம் தான் காரணம் என கூறப்பட்டது.
2022 ஐபிஎல் மெகா ஏலம்
அதன் பின்னர் 2022 ஐபிஎல் மெகா ஏலத்தில் எந்த அணியும் அவரை வாங்கவில்லை.
எனினும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி காயத்தால் தொடரில் இருந்து வெளியேறிய டேவிட் வில்லிக்கு என்ற வீரருக்கு பதிலாக, கேதார் ஜாதவை அணியில் சேர்த்தது.
இந்நிலையில் தற்போது நடக்கவிருக்கும் ஐபிஎல் ஏலத்தில் தனக்கான அடிப்படை விலையாக 2 கோடியை கேதார் ஜாதவ் நிர்ணயம் செய்துள்ளார்.
பெயர் நீக்கம்
50 லட்சம் என அடிப்படை விலையை நிர்ணயம் செய்யாமல் 2 கோடியாக அவர் விலை நிர்ணயம் செய்ததால் இறுதி ஏலப் பட்டியலில் கேதார் ஜாதவ் பெயர் இடம் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஐபிஎல் மினி ஏலத்தில் 1166 வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்தனர்.
அதில் 333 வீரர்கள் மட்டுமே இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதோடு, 833 வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |