இறுதி ஓவரில் 3 சிக்சர்களை பறக்கவிட்ட தோனி.... சென்னை அணிக்கு கிடைத்த அபார வெற்றி!

MS Dhoni Rohit Sharma Chennai Super Kings Mumbai Indians IPL 2024
By Kathirpriya Apr 15, 2024 06:06 AM GMT
Report

17வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 29வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் மோதிய நிலையில் 20 ஓட்ட வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியை தனதாக்கிக்கொண்டுள்ளது.

இந்தப் போட்டிக்கான நாணயசுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது, இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துடுப்பாட்டத்திற்கு தொடக்க வீரர்களாக ரஹானே, ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர்.

இதில் ரஹானே 5 ஓட்டங்களிலும், ரவீந்திரா 21 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர், அதனை அடுத்து களமிறங்கிய அணித் தலைவர் ருதுராஜ் கெய்குவாட், சிவம் துபே ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஒரே ஓவரில் 6 சிக்சர்..! மற்றொரு சாதனை

ஒரே ஓவரில் 6 சிக்சர்..! மற்றொரு சாதனை

இறுதி ஓவரில் 3 சிக்சர்

பொறுப்புடன் ஆடிய கெய்குவாட் 40 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்சர்கள் உள்பட 69 ஓட்டங்கள் பெற்று நிலையில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து மிச்சேல் உடன் ஜோடி சேர்ந்து தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிவம் துபே அரைசதம் கடந்தார்.

இறுதி ஓவரில் 3 சிக்சர்களை பறக்கவிட்ட தோனி.... சென்னை அணிக்கு கிடைத்த அபார வெற்றி! | Ipl 2024 Csk Won Mi By 20 Runs Ms Dhoni 3 Sixer

மிச்சேல் 17 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அடுத்ததாக களமிறங்கிய தோனி இறுதி ஓவரில் 3 சிக்சர்களை பறக்கவிட்டார், இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ஓட்டங்களை குவித்தது.

இதில் ஷிவம் துபே 38 பந்துகளில் 66 ஓட்டங்களிலும், தோனி 4 பந்துகளில் 3 சிக்சர்கள் உட்பட 20 ஓட்டங்களிலும் களத்தில் இருந்தனர். இதையடுத்து 207 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது.

சென்னை அணியின் தலைவராகும் ரோகித் சர்மா! வாகன் ஆருடம்

சென்னை அணியின் தலைவராகும் ரோகித் சர்மா! வாகன் ஆருடம்

அபார வெற்றி

தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, இஷான் கிஷான் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் அதிரடி காட்டினர், தொடக்க விக்கெட்டுக்கு 70 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் இஷான் கிஷான் 23 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இறுதி ஓவரில் 3 சிக்சர்களை பறக்கவிட்ட தோனி.... சென்னை அணிக்கு கிடைத்த அபார வெற்றி! | Ipl 2024 Csk Won Mi By 20 Runs Ms Dhoni 3 Sixer

பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார், மறுபுறம் ரோகித் சர்மா சிறப்பாக ஆடி ஓட்டங்களை குவித்தார். சென்னை அணியின் பந்துவீச்சை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்ட ரோகித் சர்மா சதமடித்தார்.

மறுபுறம் திலக் வர்மா 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார், இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ஓட்டங்களை மட்டும் எடுத்தது. இதனால் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

இதில் ரோகித் சர்மா 63 பந்துகளில் 103 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை அணியில் சிறப்பாக பந்துவீசிய பதிரன 4 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.  

ஹர்திக் பாண்டியாவிற்கு ரோகித் சர்மா வைக்கப்போகும் ஆப்பு

ஹர்திக் பாண்டியாவிற்கு ரோகித் சர்மா வைக்கப்போகும் ஆப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  



ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011