ஹர்திக் பாண்டியாவிற்கு ரோகித் சர்மா வைக்கப்போகும் ஆப்பு
தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவராக செற்பட்டுவரும் ஹர்த்திக் பாண்டியா தனக்கு காயம் உள்ளதை மறைத்து விளையாடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
2024 ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஹர்திக் பாண்டியா 4 ஓவர்களும் பந்து வீசி தன்னை ஒரு வேகப் பந்துவீச்சாளராக நிரூபிக்க முயன்றார். அதிலும் முதல் ஓவரை வீசி ஒரு முழு நேர வேகப் பந்துவீச்சாளர் போல செயல்பட்டு இருந்தார்.
காலில் காயம் ஏற்பட்டு இருக்கலாம்
ஆனால், கடைசி மூன்று போட்டிகளில் அவர் ஒரு ஓவர் மட்டுமே பந்து வீசி இருக்கிறார். இது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதே சமயம் அவர் காலில் காயம் ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
ஆனால், இரண்டு போட்டிகளுக்கு பின் பந்து வீசுவதை நிறுத்திக் கொண்டதால், அவருக்கு மீண்டும் காலில் வலி அல்லது காயம் ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தை வலுப் பெறச் செய்துள்ளது.
நியூசிலாந்து வீரர் விமர்சனம்
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு பின் பாண்டியாவிடம் அவர் பந்து வீசாதது குறித்து கேட்ட போது அவர் அணியில் போதிய பந்துவீச்சாளர்கள் இருப்பதால் தான் பந்து வீசவில்லை என தனக்கு காயம் இருப்பதை மறைத்து இருப்பதாக முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டல் விமர்சனம் செய்து இருக்கிறார்.
ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் இருக்கும் பட்சத்தில் அவரை 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா சேர்க்காமல் போக வாய்ப்பு உள்ளது. சிவம் துபே வேகப் பந்துவீச்சு ஆல் - ரவுண்டராக செயல்படுவார் என்பதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கக் கூடும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |