சிஎஸ்கே -ஆர்சிபி போட்டிகள்: ஐபிஎல் விதிமுறையில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள்
ஐபிஎல் (2024) ஆரம்பமாகவுள்ள நிலையில் தொடரில் புதிய மாற்றங்களை பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஐபிஎல் 2024 தொடர் நாளை (மார்ச் 22) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது.
தொடக்க போட்டியில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும், பெப் டூ பிளசிஸ் தலைமையிலான ஆர்சிபி அணியும் மோதவுள்ளதால் இந்த போட்டிக்கும் எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ஐபிஎல் விதிகள்
இந்நிலையில், ஐபிஎல் 2024 தொடரில் புதிய மாற்றங்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரையில் துடுப்பாட்ட வீரர்களுக்கே விதிமுறைகள் சாதகமாகவுள்ளதாக பார்க்கப்படுகின்றது.
அந்த வகையில் தற்போது நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடரில் ஒரே ஓவரில் இரு பவுன்சர்கள் வீசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில், ஒரு ஓவரில் ஒரு பவுன்சர்கள் வீசலாம் என்ற நிலையில் தற்போது இந்த விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பந்துவீச்சாளர்களுக்கு சாதகம்
இது கடைசி ஓவர்களை வீச வரும் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லட்சுமிபதி பாலாஜி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டை போல அகலப்பந்து (வைடு), நோ பந்துகளை போன்றவைகளையும் அணிகள் மீள்ப்பார்வை(ரிவிவ்) செய்யலாம் என்றும், ஒரு இன்னிங்சில் ஓர் அணிக்கு 2 மீள்ப்பார்வை (ரிவிவ் )வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஐசிசி புதிதாக நடைமுறைப்படுத்தியுள்ள ஸ்டாப் க்ளொக்(Stop Clock) முறையை ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |