முதல் போட்டியிலேயே இரண்டு சாதனைகளை படைத்த விராட் கோலி
2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில் பெங்களூரு அணியை சேர்ந்த விராட் கோலி இரண்டு சாதனைகளை பெற்றுள்ளார்.
நேற்று முன்தினம் (22) சென்னை - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில், நாணய சுழற்சியில் வென்று முதலில் விளையாடிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர் விராட் கோலி 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இந்த போட்டியில் கோலி ஆறு ஓட்டங்கள் எடுத்த போது டி-20 கிரிக்கெடில் 12000 ஓட்டங்களை கடந்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 12 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்தார்.
இரண்டு சாதனைகள்
கிறிஸ் கெய்ல், சோயிப் மாலிக், பொல்லார்டு, அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் வார்னர் ஆகியோர் ஏற்கனவே இந்த மைல் கல் சாதனையை எட்டியுள்ளனர். இந்த பட்டியலில் விராட் கோலிக்கு அடுத்த படியாக இந்திய வீரர்களில் ரோகித் சர்மா 11156 ஓட்டங்களை குவித்துள்ளார்.
மேலும், சென்னை அணிக்கு எதிராக ஆயிரம் ஓட்டங்களை அடித்த 2 ஆவது வீரர் என்ற மற்றொரு சாதனையை விராட் கோலி படைத்தார். சிஎஸ்கே அணிக்கு எதிராக விராட் கோலி 32 போட்டிகளில் ஆயிரத்து ஆறு ஓட்டங்களை எடுத்துள்ளார்.
சென்னை அணிக்கு எதிராக டேவிட் வார்னர் ஆயிரத்து 105 ஓட்டங்களை எடுத்தததே இந்த அணிக்கு எதிராக ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ஓட்டங்களாக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |