வரலாற்றில் மோசமான சாதனை படைத்த சென்னை அணி - ஏமாற்றம் தந்த தோனி
ஐ.பி.எல். (IPL) தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்வி இரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அணியின் தலைவர் ருதுராஜ் கைக்வாட்டுக்கு (Ruturaj Gaikwad ) முழங்கையில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக மகேந்திர சிங் தோனி மீண்டும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்றைய தினம் நடந்த சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கிடையிலான போட்டியில் சென்னை அணி மோசமான தோல்வியை தழுவி உள்ளது.
குறைந்தபட்ச ஓட்டங்கள்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ஓட்டங்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 107 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
18 ஆண்டு கால ஐ.பி.எல். வரலாற்றில் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடித்த குறைந்தபட்ச ஓட்டங்கள் இதுவாகும். மேலும் சேப்பாக்கம் மைதானத்தில் குறைந்தபட்ச ஓட்டங்களை பதிவு செய்த 2-வது அணி என்ற மோசமான சாதனையையும் சென்னை படைத்தது.
இதன்படி கொல்கத்தா அணி 6 புள்ளிகளுடன் ஐ,பி.எல். தொடரின் தனது 3 வெற்றியை பதிவு செய்தது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி தொடர்ந்து 5 வது முறையாக தோல்வியை சந்தித்துள்ளது.
சர்ச்சைக்குரிய தோனியின் ஆட்டமிழப்பு
இந்நிலையில், போட்டியில் சி.எஸ்.கே. அணித்தலைவர் எம்.எஸ்.தோனி எல்.பி.டபிள்யூ. (LBW) முறையில் ஆட்டமிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
The UltraEdge showed slight murmurs as the ball passed MS Dhoni's bat 👀
— Star Sports (@StarSportsIndia) April 11, 2025
What do you make of the third umpire's decision? 🤔#IPLonJioStar 👉 #CSKvKKR | LIVE NOW on Star Sports Network & JioHotstar! pic.twitter.com/zAjgaEsO8h
சுனில் நரைன் வீசிய 16ஆவது ஓவரின் மூன்றாவது பந்தில் தோனி எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். நடுவரின் முடிவை தோனி மேல்முறையீடு செய்தார்.
இதன்போது பந்து பேட்டை கடக்கும்போது சிறிய அல்ட்ராஎட்ஜ் ஸ்பைக் வந்தது. இதனை நீண்ட நேரம் பார்த்த மூன்றாவது நடுவர் இறுதியாக ஆட்டமிழப்பைக் கொடுத்தார்.
தோனி தலைமையில் சென்னை அணி மீள்வருகையை கொடுக்கும் என சேப்பாக்கத்தில் குவித்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
சென்னை அணித்தலைவர் தோனி
செய்தியாளர்களிடம் பேசிய சென்னை அணித்தலைவர் தோனி, "கடந்த சில நாட்களாகவே எங்களுக்கு சாதகமாக எதுவும் நடக்கவில்லை. இன்னும் ஆழமாக என்னவெல்லாம் தவறாக செல்கிறது என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும்.
நிறைய சவால்கள் உள்ளன . ஆனால், அதையெல்லாம் சமாளித்து தான் ஆக வேண்டும். நாங்கள் போதுமான ஓட்டங்களை எடுக்கவில்லை. பேட்டிங்கின் போது பந்து கொஞ்சம் நின்று தான் வந்தது.
ஆனால், நாங்கள் பந்து வீசுகையில் அவர்களுக்கும் அப்படித்தான் இருந்தது. எங்களுக்கு பார்ட்னர்ஷிப்களே அமையவில்லை. பவர்பிளே பற்றி பேசுகையில், சூழலை பற்றியும் பேச வேண்டும்.
நாங்கள் சில போட்டிகளில் நன்றாக ஆடியிருக்கிறோம். எங்களுடைய அணுகுமுறையை வேறு அணிகளோடு ஒப்பிட வேண்டாம் என நினைக்கிறேன்.
பெரிய இலக்குகளை நோக்கி
எங்களுடைய பலம் என்னவோ அதற்கேற்ப ஆடினால் போதும் என நினைக்கிறேன். எங்கள் அணியில் சிறப்பான ஓப்பனர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லா பந்துகளிலும் சிக்சர் அடிக்கக் கூடியவர்கள் அல்ல.
ஆனால், அவர்கள் திறன் வாய்ந்த தரமான பேட்டர்கள். ஸ்கோர் போர்டை பார்த்து அழுத்தம் ஏற்றிக்கொள்ளாமல் சீரான இடைவெளியில் பவுண்டரிகளை அடித்தாலே நமக்கு தேவையான ஸ்கோர் வந்துவிடும்.
பவர் பிளேவில் 62 ஓட்டங்கள் அடிக்க வேண்டும் என்று நினைத்து ஆடக்கூடாது. ஏனென்றால் பவர் பிளேவில் விக்கெட்டுகளை அதிக அளவு இழந்துவிட்டால் பின்னர் நடு வரிசை வீரர்களுக்கு அது கடினமாக மாறிவிடும். இதன் மூலம் பின்வரிசை வீரர்களால் பெரிய இலக்குகளை நோக்கி விளையாட என்று அவர் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
