திருமலையில் இருந்து கொழும்புக்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி
Sri Lanka Police
Trincomalee
Sri Lankan Peoples
By Dilakshan
ஹபரணை-திருகோணமலை பிரதான வீதியில் ஹபரணை பகுதியில் ஓடும் பயணிகள் பேருந்தில் இருந்து தவறி விழுந்து 27 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.
திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து, நேற்று (12) ஹபரணை நகரப் பகுதியைக் கடந்து சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அதன்போது, படுகாயமடைந்த இளைஞன் உடன் ஹபரணை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
உயிரிழந்தவர், கண்டி - ரிகில்லகஸ்கட, போதிவெல பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக பொலன்னறுவை மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, பேருந்தின் சாரதி காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஹபரணை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி