சென்னை அணிக்கான சூப்பர் 10 காணொளி வெளியீடு - ரசிகர்கள் ஆரவாரம்! (காணொளி)
பிறந்துள்ள இந்த ஆண்டில் துடுப்பாட்ட ரசிகர்கள் மிகுந்த அவலுடன் எதிர்பார்த்திருக்கும் விளையாட்டு நிகழ்வு ஐபிஎல் தொடராகும்.
நட்சத்திர வீரர் தோனியின் தலைமையிலான சென்னை அணி இதுவரை 4 முறை ஐபிஎல் பட்டத்தை வென்று தொடரின் முன்னணி அணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அதேவேளை, கடந்த ஐபிஎல் தொடர் சிஎஸ்கே அணிக்கு சிறப்பாக அமையவில்லை. தொடர் தோல்விகளை சந்தித்து 9ஆவது இடத்திற்கு சரிந்தது.
மோசமான தோல்வி
மோசமான தோல்வியால் ரசிகர்கள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த நிலையில், அணியில் முக்கிய மாற்றங்களை கொண்டு புத்துணர்ச்சி ஊட்ட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.
அதற்கான முக்கிய நகர்வை சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸை சிஎஸ்கே அணி வாங்கியது.
பென் ஸ்டோக்ஸின் வருகை சிஎஸ்கே ரசிகர்களுக்கு உச்சகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் டி20 போட்டிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
சூப்பர் 10
சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையிலும் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக ஸ்டோக்ஸ் திகழ்ந்தார். எனவே, வரும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி வலுவான அணியாக திகழும் என ரசிகர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.
இந்நிலையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக சிஎஸ்கே அணி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு சிறப்பான காணொளியை பதிவிட்டுள்ளது.
அந்த அந்த காணொளியில் 2022ஆம் ஆண்டின் வெளியான திரை படங்களில் உள்ள சிறப்பான வசனங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாக வசனங்களை வீரர்களின் துடுப்பாட்ட பாணியுடன் பொருத்தி காணொளிடை வெளியிட்டுள்ளார்.
? Sounds of 2022 meets the pride! ?#Super10 #WhistlePodu ?? pic.twitter.com/0cPmtQnVDw
— Chennai Super Kings (@ChennaiIPL) December 31, 2022
சூப்பர் 10 என்ற தலைப்பில் இந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளது


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
