ஐந்தே நாட்களில் சென்னை அணியின் சாதனையை முறையடித்த லக்னோ..!
ஐ.பி.எல் 2023 தொடரின் 38-வது போட்டியில் லக்னோவும் பஞ்சாப் அணியும் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதனையடுத்து, முதலில் களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுலும், மேயர்ஸ்ஸும் களமிறங்கினர்.
அதிரடி ஆட்டம்
ராகுல் 12 ஓட்டங்களோடு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதனையடுத்து பதோனி களமிறங்கினார்.
மேயர்ஸ், பதோனி ஜோடி அதிரடியாக ஆடியது. மேயர்ஸ் 24 பந்துகளில் 54 ஓட்டங்களையும் , பதோனி 24 பந்துகளில் 43 ஓட்டங்களையும் குவித்தனர்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்டாய்னிஸ் பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்களை தனது அதிரடி ஆட்டத்தால் மிரட்டினார்.
40 பந்துகளில் 72 ஓட்டங்களை குவித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பூராணும் அதிரடியாக ஆடிய 45 ஓட்டங்களை குவித்தார்.
257 ஓட்டங்கள்
லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 257 ஓட்டங்களை குவித்தனர்.
அதனையடுத்து, களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங்கும், ஷிகர் தவனும் களமிறங்கினர்.
தவன் 1 ஓட்டத்துடனும், பிரப்சிம்ரன் 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய அதர்வா டைய்டி அதிரடியாக ஆடி 66 ஓட்டங்களை எடுத்தார்.
20 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் அணி 201 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
சென்னை அணிக்கு பின்னடைவு
ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச அணியின் ஓட்டப்பிரதியை லக்னோ அணி பதிவு செய்தது.
இதற்கு முன்பாக, கடந்த 2013ஆம் ஆண்டில் புனே அணிக்கு எதிராக, பெங்களூரு அணி 263 ஓட்டங்களை குவித்ததே இன்று வரை அதிகபட்ச ஓட்டப்பிரதியாக உள்ளது.
இந்த தொடரில் கொல்கத்தாவுக்கு எதிராக 235 ஓட்டங்களை எடுத்து அதிக ஓட்டங்கள் குவித்த அணியாக சென்னை அணி முதலிடத்தில் இருந்தது.
எனினும் நேற்றைய ஆட்டத்தின் மூலம் சென்னை அணியை பட்டியலில் பின்னுக்கு தள்ளி லக்னோ அணி முதலாம் இடத்திற்கு முன்னேறியது.
