அடுத்தடுத்து ஐ.பி.எல் கிண்ணத்தை வெல்லும் அணியாக குஜராத்? வெளியான கணிப்பு..!

Chennai Super Kings Gujarat Titans TATA IPL India IPL 2023
By Pakirathan May 28, 2023 11:58 AM GMT
Report

16 ஆவது ஐ.பி.எல் தொடர் கோலாகலமாகத் தொடங்கி, தற்போது அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.

பிளே ஓப் ஆட்டங்கள், குவாலிபையர் 1, குவாலிபையர் 2 போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இறுதிப் போட்டியில் இன்றையதினம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் அணியும் மோதவுள்ளன.

அடுத்தடுத்து கிண்ணம் 

அடுத்தடுத்து ஐ.பி.எல் கிண்ணத்தை வெல்லும் அணியாக குஜராத்? வெளியான கணிப்பு..! | Ipl Live Today Final Csk Vs Gt

ஐ.பி.எல் போட்டியில் இதுவரை அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முறையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 முறையும் கிண்ணத்தை வென்றுள்ளதுடன், இதில் மும்பை அணி தொடர்ச்சியாக 2019 மற்றும் 2020 ல் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் அடுத்தடுத்து கிண்ணத்தை சுவீகரித்தது.

அதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் 2010 மற்றும் 2011ம் ஆண்டில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் அடுத்தடுத்து கிண்ணத்தை வென்றது.

இதன் மூலம் நடப்பு சாம்பியன்களாக இருந்து ஐ.பி.எல் போட்டியில் தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகள் என்ற பெருமையை மும்பை மற்றும் சென்னை அணிகள் பெற்றுள்ளன.

குஜராத் அணி 

அடுத்தடுத்து ஐ.பி.எல் கிண்ணத்தை வெல்லும் அணியாக குஜராத்? வெளியான கணிப்பு..! | Ipl Live Today Final Csk Vs Gt

கடந்த 2021 இல் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் முதன்முறையாக கால் பதித்தது ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி.

அறிமுகமான முதல் ஆண்டிலேயே கிண்ணத்தை வென்று, அனைவரது கவனத்தையும் ஈர்த்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடத்தில் இருந்த அதே எதிர்பார்ப்புகளுடன் இந்த வருடத்திற்கான முதல் போட்டியில் சென்னை அணியும் நடப்பு சாம்பியனான குஜராத் அணியும் மோதியிருந்தன.

அதிரடியாக விளையாடிய குஜராத் சென்னை அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.

இம்முறையும் மீண்டும் குஜராத் அணி நடப்பு ஐ.பி.எல் தொடரில் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.

இந்த தொடரிலேயே குறைந்த தோல்விகளை மட்டுமே பதிவு செய்துள்ள குஜராத் அணிக்கு சுப்மன் கில்லின் அதிரடியான ஆட்டம் சிறப்பான பங்களிப்பை வழங்கிக்கொண்டிருக்கிறது.

வெற்றி வாய்ப்பு

அடுத்தடுத்து ஐ.பி.எல் கிண்ணத்தை வெல்லும் அணியாக குஜராத்? வெளியான கணிப்பு..! | Ipl Live Today Final Csk Vs Gt

அதேபோல முகமது சமி சிறப்பான பந்து வீச்சினால் அசந்திக்கொண்டிருப்பதுடன், ஹர்திக் பாண்டியாவின் தலைமைத்துவமும் அந்த அணிக்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணி எதிர் கொள்ளும் இறுதி போட்டி குஜராத் அணியின் சொந்த மைதானமான அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதுவரை அகமதாபாத் மைதானத்தில் விளையாடிய போட்டிகள் அனைத்தும் குஜராத் அணிக்கு கை கொடுத்துள்ளன.

சுப்மன் கில்லின் அதிரடி துடுப்பாட்டம், முகமது சமி, ரஷித் கான் ஆகியோர் பந்துவீச்சால் எதிரணிக்கு அழுத்தங்களை வழங்கலாம், அவ்வப்போது மோகித் சர்மா மற்றும் நூர் அகமது வெளிப்படுத்தும் சிறப்பான ஆட்டங்கள் போன்றவை குஜராத் அணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

சிறப்பான துடுப்பாட்ட வரிசை மற்றும் பந்துவீச்சாளர்களை கொண்டுள்ள நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த முறையும் சென்னையை வீழ்த்தி வெற்றி வாகை சூடுமா..? அதன் மூலம் தொடர்ச்சியாக அடுத்தடுத்து சாம்பியன் பட்டம் வென்ற சென்னை, மும்பை அணிகளின் பட்டியலில் இடம்பெறுமா என்பது இன்று தெரிந்துவிடும்.

ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026