ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த சிஎஸ்கே..!
ஐபிஎல் வரலாற்றில் 10 ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சிஎஸ்கே அணி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
சென்னை சேர்ப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் குஜராத் அணியை 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சிஎஸ்கே அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்த போட்டியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் ஐபில் கிரிக்கட் வரலாற்றில் 10 ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் அணி என்ற அணி என்ற சாதனையை பெற்றுள்ளது.
இதற்கு முன் 9 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சி.எஸ்.கே. 4 முறை சாம்பியன் பட்டம் வென்றது.
இரண்டாவது இடத்தில்
[WK07KK]
சென்னைக்கு அடுத்தபடியாக மும்பை இந்தி யன்ஸ் அணி 6 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 6 முறையில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதில் 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இந்த நிலையில், ஆர்.சி.பி அணி 3 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 3 முறையும் கோப்பையை தவறவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
