சீனாவிற்கு கிடைத்த வெற்றி : ஹோர்முஸ் நீரிணை வழியாக 30 கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி
ஹோர்முஸ் நீரிணை வழியாக 30 சீன கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. இதனால் அமெரிக்கா ஈரான் துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்களை முற்றுகையிடுவதாக தெரிவித்தது. இதனால் உலக நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டில் திண்டாடி வருகிறது.
ஹோர்முஸ் நீரிணையை திறக்க சீன ஜனாதிபதியும் ஆதரவு
இந்நிலையில் 3 நாள் பயணமாக ட்ரம்ப் சீனா சென்றார். இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஹோர்முஸ் நீரிணையை திறக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அழைப்புக்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆதரவு தெரிவித்தார். அதேவேளையில் ட்ரம்பின் ஹோர்முஸ் நீரிணையை இராணுவமயமாக்குதல் திட்டத்திற்கு ஜி ஜின்பிங் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் அளித்த அனுமதி
இதனால், ஈரான் 30 சீன கப்பல்களை ஹோர்முஸ் நீரிணையை கடந்து செல்ல அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை அனைத்து வணிகக் கப்பல்களுக்கும் திறந்தே உள்ளது. ஆனால், இந்நீர்வழி வழியாகச் செல்லும்போது அவை ஈரானிய கடற்படைப் படைகளுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அராக்சி தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |