ஹோர்முஸ் நீரிணையை கடந்த UAE கப்பல் மீது ஈரான் தாக்குதல்
ஹோர்முஸ் நீரிணையை கடந்து சென்றுகொண்டிருந்த அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்தின் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.
இது குறித்து அமீரகத்தின் அரசு ஊடகங்கள் வெளியிட்ட செய்தியின் படி, தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் கூறியுள்ளது.
இந்நிலையில் தூண்டப்படாத தாக்குதல்களை நிறுத்தவும், பகைமைகளை முடிவுக்குக் கொண்டுவரவும், நீர்வழியை முழுமையாக மீண்டும் திறக்கவும் ஈரானை ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சகம், வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்க - இஸ்ரேலியப் போர்
எனினும் இந்த தாக்குதல் குறித்து ஈரான் உடனடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக ஈரானின் எதிரிகளுடன் தொடர்பு கொண்டாலோ அல்லது ஈரானிய உத்தரவுகளுக்கு இணங்கத் தவறினாலோ, நீர்வழிப்பாதையைக் கடக்கும் கப்பல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என IRGC படையினர் அச்சுறுத்தியிருந்தனர்.
இதற்கமைய ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்தில் ADNOC கப்பல்கள் சம்பந்தப்பட்ட மூன்றாவது சம்பவம் இதுவாகும்.
மேலும், முந்தைய சம்பவங்களுக்குப் பின்னணியில் ஈரான் இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் குற்றம் சாட்டியிருந்தது.
மோதலுக்கு முன்பு , உலகின் எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு, ஓமானுக்கும் ஈரானுக்கும் இடையிலான குறுகிய நீர்வழிப்பாதை வழியாகக் கடந்து சென்றது .
பெப்ரவரி 28 அன்று ஈரானுடனான அமெரிக்க - இஸ்ரேலியப் போர் வெடித்ததிலிருந்து, கப்பல் போக்குவரத்து மீண்டும் மீண்டும் தடைபட்டு, சரக்குக் கட்டணங்களை உயர்த்தி, பாதுகாப்பு குறித்த கவலைகளையும் உருவாக்கியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |