குவைத்தில் உள்ள அமெரிக்கப் படைகளை குறிவைத்த ஈரான்
ஹோர்முஸ் நீரிணையை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு வாரத்தில் மூன்றாவது பதற்றநிலை ஏற்பட்டுள்ள பின்னணியில் குவைத்தில் உள்ள அமெரிக்கப் படைகளை ஈரான் தாக்கியுள்ளது.
சர்வதேச கடல் பகுதியில் அமெரிக்க ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது உள்ளிட்ட தொடர்ச்சியில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போர் தொடங்கியதிலிருந்து ஈரான் 20 அமெரிக்க இராணுவத் தளங்களைச் சேதப்படுத்தியுள்ளது என்பதை பிபிசி வெரிஃபை ஆய்வு செய்த செயற்கைக்கோள் படங்கள் மற்றும் காணொளிகள் காட்டுகின்றன.
பகிரங்க ஒப்புதல்
இது, பகிரங்கமாக ஒப்புக்கொள்ளப்பட்டதை விட இந்தத் தாக்குதல்கள் மிகவும் விரிவானவை என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

பெப்ரவரி மாத இறுதியில் இருந்து மத்திய கிழக்கில் உள்ள எட்டு நாடுகளில் முக்கிய தளங்களை ஈரான் குறிவைத்ததால், அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகள், எரிபொருள் நிரப்பும் விமானங்கள் மற்றும் ரேடார்களுக்கு மில்லியன் கணக்கான டொலர் சேதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக ஈரான் மற்றும் லெபனான் முழுவதும் அமெரிக்க-இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, தெஹ்ரான் அமெரிக்கத் தளங்களையும், அமெரிக்க இராணுவத்தின் கூட்டு வசதிகளையும் குறிவைத்துள்ளது. '
விரோத ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை எதிர்கொண்டு வருவதாக" குவைத் இராணுவம் திங்கள்கிழமை அதிகாலையில் தெரிவித்த நிலையில் , நாடு முழுவதும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதாக அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பின்னர் அதன் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், "குவைத் மீதான ஒரு அபாயகரமான பதற்ற அதிகரிப்பையும் நேரடித் தாக்குதலையும் பிரதிநிதித்துவப்படுத்தும், ஈரானின் கொடூரமான மற்றும் தொடர்ச்சியான தாக்குதல்களை மிகக் கடுமையாகக் கண்டித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |