பதற்றத்திற்கு மத்தியிலும் ஈரானை பாராட்டிய ட்ரம்ப்
ஈரானில் 800க்கும் மேற்பட்டோருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை அந்நாடு இரத்து செய்ததற்காக அமெரிக்க ஜனாதிபதிட்ரம்ப் ஈரான் அரசை பாராட்டியுள்ளார்.
ஈரானில் இடம்பெற்று வரும் போராட்டங்களை அடுத்து 3000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தூக்கு தண்டனை
வன்முறையில் ஈடுபட்டு பொதுசொத்துகளை சேதப்படுத்தியவர்களுக்கு அந்நாட்டு சட்டத்தின்படி, தூக்கு தண்டனை விதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்தது. இந்த சூழலில், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

பெரிய அளவில் மதிக்கிறேன்
இது குறித்து நிருபர்களிடம் ஜனாதிபதி ட்ரம்ப் கூறியதாவது: ஈரானில் 800 பேரை நேற்று தூக்கில் போட திட்டமிடப்பட்டு இருந்தது. அதனை அவர்கள் இரத்து செய்துள்ளனர். இதனை நான் பெரிய அளவில் மதிக்கிறேன். என கூறியுள்ளார்.
அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'ஈரானில் 800க்கும் மேற்பட்டோரின் மரண தண்டனைகள் இரத்து செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |