அமெரிக்கா - இஸ்ரேலுக்கு அஞ்சாது ஈரான் விடுத்த பகிரங்க மிரட்டல்!
ஈரான் (Iran) தனது அணுசக்தி திட்டத்தை பாதுகாத்து வருவதாகவும், அதனை தொடர்ந்து செயல்படுத்த தயங்காது என்றும் ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாயி (Esmail Baghaei) தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலும் (Israel) அமெரிக்காவும் (US) ஈரானின் அணுசக்தி குறிக்கோளை எதிர்ப்பதாக தெரிவித்த அடுத்த நாள் குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, நிச்சயமாக இந்த விடயத்தில் தாங்கள் எந்த பலவீனத்தையும் காட்ட மாட்டோம் எனவும் எஸ்மாயில் பகாயி குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் செல்வாக்கு
இந்த நிலையில், இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானின் அணுசக்தி குறிக்கோளையும் மத்திய கிழக்கில் அதன் செல்வாக்கையும் முறியடிக்க உறுதியாக உள்ளதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஜெருசலேமில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவை சந்தித்த பின்னர் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்றையதினம் இதனை கூறியுள்ளார்.
இதன்போது, கருத்த தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர், ஒவ்வொரு பயங்கரவாதக் குழுவின் பின்னாலும், ஒவ்வொரு வன்முறைச் செயலுக்கும், இந்தப் பிராந்தியத்தை தாயகமாகக் கொண்ட மில்லியன் கணக்கான மக்களின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்தும் அனைத்திற்கும் பின்னால் ஈரான் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 5 நாட்கள் முன்
