போரினால் ஈரானுக்கு ஏற்பட்டுள்ள பெருந்தொகை இழப்பு! மதிப்பீடுகள் தீவிரம்
ஈரான் மீதான போர்த் தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்த ஆரம்பகட்ட மதிப்பீடு சுமார் 270 பில்லியன் டொலர்கள் என அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ரஷ்ய செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது ஈரான் அரசின் செய்தித் தொடர்பாளர் பாத்திமா மொஹஜெரானி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளதாக தெரியவருகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் ஈரான் சந்தித்துள்ள இந்த இழப்புகள் குறித்துப் பேசிய அவர், இது ஒரு ஆரம்பகட்டத் தொகை மட்டுமே என்றும், இறுதி மதிப்பீட்டின் போது இந்தத் தொகை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
இழப்பீடு கோரும் விவகாரம்
குறிப்பாக, இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது ஈரான் தரப்புக் குழுவினர் வலியுறுத்திய முக்கிய அம்சங்களில் ஒன்று போர் இழப்பீடு தொடர்பானதாகும்.

Image Credit: Caspian Post
போரினால் ஏற்படும் சேதங்களை பல்வேறு நிலைகளில் ஆராய வேண்டியுள்ளதால், இழப்பீடு கோரும் விவகாரத்தை ஈரான் தீவிரமாக முன்னெடுத்து வருவதாகவும் அவர் அந்தப் பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |