வெற்றிகரமாக மூன்று செயற்கைகோள்களை விண்ணுக்கு செலுத்தியது ஈரான்
Missile
Iran
By Sumithiran
உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட 3 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானின் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் சொந்த தயாரிப்பான சிமோர்க் ரொக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
தகவல்தொடர்பு மற்றும் புவிசார் தொழில்நுட்பம் குறித்த
ஈரான் விண்வெளி நிறுவனம் தயாரித்துள்ள இந்த செயற்கைக்கோள்கள், தகவல்தொடர்பு மற்றும் புவிசார் தொழில்நுட்பம் குறித்த பயன்பட்டுக்கு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா குற்றச்சாட்டு
செயற்கைக்கோள் சோதனைகள் நடத்தியிருப்பதன் மூலம், ஐ.நா. பாதுகாப்பு குழுவின் தீர்மானத்தை மீறி ஈரான் செயல்பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், அணு ஆயுத திறன் வாய்ந்த எவ்வித பாலிஸ்டிக் ஏவுகணைகள் சோதனை முயற்சிகளையும் ஈரான் மேற்கொள்ளக் கூடாது எனவும் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி