இந்தியப் பெருங்கடலில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அமெரிக்க-பிரித்தானியக் கூட்டு இராணுவத் தளமான டியேகோ கார்சியா மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்' செய்தியை மேற்கோள் காட்டி ரொய்டர்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
ஈரானிலிருந்து இரண்டு இடைநிலைத் தொலைவு ஏவுகணைகள்,டியேகோ கார்சியாவை இலக்கு வைத்து ஏவப்பட்டுள்ளதாகவும் எனினும் இந்த இரண்டு ஏவுகணைகளும் இலக்கை எட்டவில்லை.
அமெரிக்கப் போர்க்கப்பல்
டியேகோ கார்சியா தளம் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏவப்பட்ட ஏவுகணைகளில் ஒன்று நடுவானிலேயே செயலிழந்து வீழ்ந்துள்ளதாகவும், மற்றொன்றை அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று AM-3 இடைமறிப்பு ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்த முயற்சித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அந்த இடைமறிப்பு முழுமையாக வெற்றியடைந்ததா என்பது குறித்த ஆய்வுகள் நடந்து வருவதாகவும் ரொய்டர்ஸ் செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |