ட்ரம்பை சிறையில் அடைத்த ஈரான்: விளம்பர பலகையால் பரபரப்பு
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை சிறையில் அடைத்தது போன்று ஈரான் காட்சிப்படுத்தியுள்ள சம்பவம் பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை, சிறையில் அடைத்தது போன்ற விளம்பர பலகை ஈரான் தலைநகர் தெஹ்ரா னில் வைக்கப்பட்டு உள்ளது. தஜ்ரிஷ் சதுக்கத்தில் ஒரு விளம்பர பலகை அருகே சிறைச்சாலை வடிவில் கூண்டு வைக்கப்பட்டு உள்ளது.
விளம்பர பலகை
அதற்குள் ட்ரம்ப் போல வேடமிட்ட ஒருவர் இருக்கிறார்.ட்ரம்ப் முகமூடி-விக் ஆகியவற்றை அணிந்து உள்ளார்.படுக்கை, கழிப்பறை மற்றும் கைகழுவும் தொட்டியுடன் பொருத்தப்பட்டுள்ள அந்த கூண்டின் உள்ளே, ட்ரம்ப் போன்ற அந்த நபர் கம்பிகள் அருகே நிற்கிறார்.

பின்னர் படுத்து உறங்குகிறார். இது பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது. இதை மக்கள் தங்களது செல்போன்களில் புகைப்படம், காணொளி எடுத்தனர்.
கூண்டின் பின்னால் உள்ள ஒரு மின்னணு விளம் பரப்பலகையில் கடந்த மாதம் தெற்கு ஈரானில் ஒரு திருமண விழா மீது நடத்தப்பட்ட அமெரிக்கத் தாக்குதல் தொடர்பான படங்கள் ஒளிபரப்பப்படுகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |