ஈரானில் மோசமடையும் நிலைமை! நிரம்பி வழியும் வைத்தியசாலைகள்
தெஹ்ரானில் உள்ள வைத்தியசாலைகள் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல்களில் காயமடைந்தவர்களால் நிரம்பி வழிவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானில் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் மேற்கண்ட தகவல் வெளியாகியுள்ளது.
நெருக்கடியில் வைத்தியசாலை அமைப்பு
இந்த நிலையில், தெஹ்ரானில் உள்ள சுகாதார அதிகாரிகளை மேற்கோள் காட்டி, தற்போதைய சூழ்நிலை காரணமாக வைத்தியசாலை அமைப்பும் நெருக்கடியில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Image Credit: Le Monde
இவ்வாறானதொரு பின்னணியில், 13 நாள் போராட்டங்களில் 50க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களும் 15 பாதுகாப்புப் பணியாளர்களும் உயிரிழந்துள்ளனர்.
கைதுகள்
இதேவேளை, 2,300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.

மேலும், அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள் பரவுவதைத் தடுக்க இணைய இணைப்புகளை நிறுத்த ஈரானிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |