ட்ரம்பிற்கு பலத்த அடி : அமெரிக்காவின் போர் நிறுத்த முன்மொழிவுகளை நிராகரித்தது ஈரான்
போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா முன்வைத்த 15 அம்ச நிபந்தனைகளை ஈரான் அடியோடு நிராகரித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
போர், ஈரானின் சொந்த நிபந்தனைகள் மற்றும் கால அட்டவணையின்படி மட்டுமே முடிவுக்கு வரும் என்று ஒரு மூத்த ஈரானிய அரசியல் மற்றும் பாதுகாப்பு அதிகாரி இன்று (25) அரசு தொலைக்காட்சியில் கூறினார்.
போரை முடிவிற்கு வரும் நேரத்தை ட்ரம்ப் நிர்ணயிக்க அனுமதியோம்
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேரத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்ணயிக்க ஈரான் அனுமதிக்காது என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் ஐந்து நிபந்தனைகளை விதித்துள்ளது. அவையாவன:
எதிரியின் 'ஆக்கிரமிப்பு மற்றும் படுகொலைகள்' முழுமையாக நிறுத்தப்பட வேண்டும்.
ஈரானுக்கு எதிராக இனி போர் நடக்காது என்ற உத்தரவாதம்.
போர்ச் சேதங்கள் மற்றும் இழப்பீடு தொடர்பான தெளிவான உத்தரவாதம்.
போரில் ஈடுபட்டுள்ள அனைத்து போட்டி குழுக்களும் மற்றும் பிராந்தியம் முழுவதும் உள்ள அதன் ஆதரவாளர்களும் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்
. ஹோர்முஸ் நீரிணையின் மீது ஈரான் தனது இயற்கை மற்றும் சட்டபூர்வ உரிமையை, ஈரானிய இறையாண்மையின் அடிப்படையில் கூட, பயன்படுத்த வேண்டும்
என்பவையே நிபந்தனையாகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |